புதுதில்லி:
முன்னேற்பாடுகள் இல்லாமல் ஊரடங்கை அறிவித்த மோடி அரசு, 50 நாட்களுக்கு மேலாகியும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்தஊர் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளைச் செய்து தரவில்லை.இதனால், அவர்கள் கால்நடையாகவே சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர். அவர்களில் பலர் விபத்துகளில் சிக்கி உயிரையும் இழக்கின்றனர். பல ஆயிரம் கிலோ மீட்டர்தூர பயணத்தில் நாளுக்கு நாள் விபத்துக்களும், பலிஎண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், புலம்பெயர்தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு ஈவிரக்கமற்ற வகையில் நடந்து கொண்டிருப்பதாக கூறி, பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய்ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தவருமான யஷ் வந்த் சின்ஹா திங்களன்று தில்லி ராஜ்காட்டில் போராட் டத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டவர் களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த,யஷ்வந்த் சின்கா “எல்லா சீரியல்களையும் போலவே நிர்மலா சீரியலும் இறுதியாகமுடிந்து விட்டது. இதுவரை எந்த ஒரு மத்திய அரசும் செய்யாததை இந்த அரசு செய்திருக்கிறது. அதாவது ஏழைகளின் காயத்தில் உப்பைவைத்துத் தேய்த்திருக்கிறது” என்று கடும் குற்றச்சாட் டுக்களை வைத்தார்.