புதுதில்லி:
ஏழைத் தொழிலாளர்களை பாதுகாக்க ரயில்வே வாரியமும் மாநில அரசுகளும் தவறிவிட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் (National Human Rights Commission - NHRC) குற்றம் சாட்டியுள்ளது.
பொதுமுடக்கத்தால் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் களுக்குத் திரும்பிச் செல்லும்போது, உணவு,குடிநீர் இன்றி தவித்ததுடன், அவர்களில் சிலர்வழியிலும், ரயிலில் செல்லும்போதும் இறந்துபோன சம்பவங்கள் அரங்கேறின.இவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த தேசிய மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பாஜக ஆளும் குஜராத், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும்பீகார் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், ரயில்வே வாரியத் தலைவர், மத்திய உள்துறை செயலருக்கு கடந்த வாரம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், “ரயில்களில் சொந்த ஊர் செல்லும்ஏழைத் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க மாநில அரசுகளும், ரயில்வே நிர்வாகமும் தவறிவிட்டன. இது கவலை அளிக்கும் விஷயமாகும். ஏழைத் தொழிலாளர்களை காட்டுமிராண்டிகள் போல ரயில்வே நிர்வாகம்நடத்தியுள்ளது. அவர்கள் மீது மனிதத்தன்மையற்ற முறையில் ரயில்வே நிர்வாகம் நடந்துள்ளது. ஊரடங்கு என்ற பெயரில் மத்திய - மாநிலஅரசுகள் செய்த தவறுகளை மறைக்க முடியாது.இதுதொடர்பாக அடுத்த 4 வாரங்களுக் குள் ரயில்வே வாரிய தலைவர், மத்திய உள்துறை செயலாளர், பீகார், குஜராத் மாநிலதலைமைச் செயலாளர்கள் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். ஏழைத் தொழிலாளர்நலனுக்காக எடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தர வேண்டும்” என்றுமனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.