‘நாட்டின் தனியுரிமையில் விளையாடுகிறீர்கள்’ இந்தியாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்
புதுதில்லி கடந்த 2021ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ் அப் (Whats app) தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ் அப் பயனாளர்களின் தகவல்களை, முகநூலிடம் (facebook) கொடுத்து சமூகவலைதள சந்தை யின் நியாயமற்ற வணிக நடை முறைகளில் மெட்டா (முகநூல், வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனம்) ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம்சாட்டி யது. மேலும் இந்த விவகாரம் தொ டர்பாக மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன்பு திங்களன்று விசார ணைக்கு வந்தது. விசாரணையின் போது வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்க றிஞர்கள் (முகுல் ரோஹத்கி, அகில் சிபல்),“பயனர்கள் தங்கள் தரவைப் பகிராமல் இருக்க ‘விலகிக்கொள்ளும் (Opt-out)’ வசதி உள்ளது. இது பயனர்களின் சம்மதமே முதன்மையானது. மேலும் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட அனைத்தும் ‘எண்ட்-டு-எண்ட் (End-to-end encrypted)’ முறைப்படி பாதுகாக்கப்படுகிறது” என வாதிட்டனர். தொடர்ந்து ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,“நாட்டின் தரவுகள் விற்கப்படுவது மட்டுமல்ல, வணிக ரீதியாகச் சுரண்டப்படு கின்றன. நாம் வெறும் நுகர்வோர் மட்டுமல்ல, நாம் ஒரு தயாரிப்பா கவும் மாற்றப்படுகிறோம்” என வாதிட்டார். அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் 2 நீதிபதிகள் அமர்வு, “நாட்டின் தனியுரிமை உரிமை யுடன் நீங்கள் விளையாட முடி யாது. இந்த நாட்டின் அரசி யலமைப்புச் சட்டத்தை நீங்கள் கேலி செய்கிறீர்கள். மக்களுக்கு என்ன தேர்வு இருக்கிறது? ஒன்று வாட்ஸ்அப்பை விட்டு வெளி யேறு அல்லது தரவைப் பகிர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மக்கள் உங்கள் தளத்திற்கு அடிமை யாகிவிட்டனர். ஒரு பாமர மனிதனோ அல்லது கிராமப்புறத் தில் இருப்பவரோ உங்களது சிக்க லான சட்ட மொழியைப் புரிந்து கொண்டு எப்படிச் சரியான முடிவெடுக்க முடியும்? மக்களின் ஒரு வார்த்தைத் தரவைக் கூடப் பகிர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதைச் செய்ய மாட்டோம் என்று உங்கள் நிர்வா கத்திடம் இருந்து உறுதிமொழிப் பத்திரம் அளிக்கத் தயாரா? இல்லை யெனில் உங்கள் வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்வோம். நீங்கள் நாட்டிலிருந்து விலகுங் கள், உங்கள் வசதிகளை இங்கிருந்து திரும்பப் பெறுங்கள்” என உத்தரவிட்டு, இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
