ரூ.2,134 கோடியில் கனவுத் திட்டம் 8.7 கி.மீ. வயநாடு சுரங்கப்பாதை பணி துவக்கம்
வயநாடு சுரங்கப்பாதை சாலையின் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. திட்டத்தின் மிக முக்கிய கட்டமான பாறை உடைக்கும் பணியை வெள்ளியன்று முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். ஆனக்கம்பெயில் - கள்ளாடி - மேப்பாடி சுரங்கப்பாதை சாலை நிறைவேறுவதன் மூலம், வயநாடு கணவாயில் போக்குவரத்து நெரிச லுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷனின் மேற்பார்வையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் இந்தக் கனவுத் திட்டம் கிப்பி (KIIFB) இலிருந்து ரூ.2,134.50 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. தோராயமாக 8.7 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை சாலை நிறைவடைந்தவுடன், கோ ழிக்கோடு மற்றும் வயநாடு இடையேயான பயண நேரம் பாதியாகக் குறையும். சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அதிநவீன தொழில் நட்பத்தைப் பயன்படுத்தி இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. திட்டத்தின் முதல் கட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. பாறை உடைக்கும் பணிகள் தொடங்கப்பட்டவுடன், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திட்டம் நிறைவடையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சாலை மலபார் பகுதியின் சுற்றுலா மற்றும் வணிகத் துறைகளில் மிகப்பெரிய ஊக்கத்திற்கு வழி வகுக்கும்.
