states

பாஜகவினரின் குழந்தைகள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸில் இல்லை

பாஜகவினரின் குழந்தைகள்  ஏன் ஆர்எஸ்எஸ்ஸில் இல்லை

தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர் எஸ்எஸ்  நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமை யாவுக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்எஸ்எஸ்  நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகா விலும் தடை விதிப்பது குறித்து மதிப் பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், பாஜகவினரின் குழந்தைகள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸில் இல்லை? என கர்நாடக அமைச்சர் பிரி யங்க் கார்கே தொடர்ந்து கேள்வி எழுப்பி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“குழந்தைகளின் மனங்க ளில் ஆர்எஸ்எஸ் நஞ்சை விதைக்கி றது. மதவெறியை போதிக்கிறது. ஆர் எஸ்எஸ் சித்தாந்தம் நல்லதாக இருந் தால், பாஜகவினரின் குழந்தைகள் ஏன் அந்த அமைப்பில் சேர்க்கப்படுவ தில்லை? ஏன் அவர்கள் பசு காவலர்கள் ஆவதில்லை? ஏன் அவர்கள் பசு மூத்தி ரம் குடிப்பதில்லை? ஏன் ஏழைகள் மட்டும் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்க்கப்படு கிறார்கள்?  தமிழ்நாட்டில் என்ன விதி இருக்கி றது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் சொல்வதெல்லாம், ஆர்எஸ் எஸ் நடவடிக்கைகளை தனியார் இடங்க ளுக்கு மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். அவர்கள் அதை தங்கள் வீடுகளிலும், தனியார் நிலங்களிலும் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். ஆனால், வகுப்புவாத விதைகளை விதைத்து மக்களை அச்சுறுத்தும் இந்த நிகழ்ச்சி நல்லதல்ல.

 ஆர்எஸ்எஸ்காரர்கள் இந்தியாவின் சிறப்பு குடிமக்களா? அவர்கள் எப்படி குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்? வேறு எந்த சமூகத்தினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் சமூக வண்ண சட்டைகளை அணிந்துகொண்டு குச்சிகளைப் பிடித்து அணிவகுப்பு நடத்தினால், யாராவது அதை அனும திப்பார்களா? கடந்த இரண்டு நாட்களாக, எனது தொலைபேசி நிறுத்தாமல் ஒலிக்கி றது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை நான் கேள்வி கேட்கவும் தடுக்கவும் துணிந்த தால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக மிரட்டல்கள் மற்றும் மோச மான துஷ்பிரயோகங்கள் நிறைந்த அழைப்புகள் வருகின்றன” என அவர் கூறினார்.