states

img

ஸ்கேன் இந்தியா

தண்ணி - 1

பாஜகவின் புதிய தலைவராகப் பதவி யேற்றுக் கொண்டுள்ள நபின், காங்கிர சின் “மோசமான” அம்சங்களில் இருந்து தள்ளி நிற்போம் என்று கூறியுள்ளார்.  303 தொ குதிகளாக இருந்த எண்ணிக்கை, 2024 தேர்தலில் 240 ஆகக் குறைந்த தோல்விக்கு கட்சியில் யாரையுமே பொறுப்பாக்கவில்லை. ஆனால், அதற்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று சமாளித்துக் கொண்டார்கள். ‘மீண்டும் தோல்வியுறப் போகும் மாநி லங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கையில் தன் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறதே’ என்ற கவலையில் நபின் இருக்கிறார். இந்நிலையில்தான் காங்கிரஸ் குறித்த விமர்சனத்தை அவர் வைத்துள்ளார். அப்போது மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த முன்னாள் காங்கிரஸ் காரர்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டனர். “தண்ணி” குடித்துக் கொண்டே இருந்தார்கள்.

தண்ணி - 2

சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதிக்கு உ.பி. பாஜக அரசு ‘தண்ணி’ காட்டியது. கங்கை யில் குளிக்க இறங்க முயன்றபோது நிர்வா கத்தினர் நிறுத்திவிட் டார்கள். சுவாமி முரண்டு பிடித்தார். “நீர் சங்கராச்சாரியார் என்று எப்படிச் சொ ல்லிக் கொள்கிறீர். நிரூபிக்க முடியுமா” என்று கிடுக்கிப்பிடி போட்டனர். “உங்கள் நிர்வாகமே கும்ப மேளா சிறப்பு மலரில் என்னை அப்படித் தானே போட்டது” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். “முதுகை வளைத்து  மோடி கும்பிட்டபோது, இவர் சங்கராச்சார்யா.. இப்போது மாட்டுக்கறி அதிகமாக உ.பி.யில் இருந்து தான் ஏற்றுமதியாகிறது என்ற விமர்சனத்தை வைத்த வுடன் சான்றிதழ் கேட்கிறீர்களா” என்று எதிர்க் கட்சிகள் வினா எழுப்பியுள்ளன. “பூரியில் இருந்து “சங்க ராச்சார்யாக்கள்” என்ற பெயரில் இரண்டுபேர் எப்படிமுகா மிட்டுள்ளனர்” என்பது உள்ளிட்ட வினாக்களை எழுப்பி, பாஜக அரசுக்கு தண்ணி காட்டத் தொடங்கியிருக்கிறார் சரஸ்வதி.

 தண்ணி - 3

இந்தூர், தில்லி என்ற வரிசையில் குஜராத்தின் பாலன்பூர் மாவட்டமும் இணைந்திருக்கிறது. மதிய உணவைச் சாப்பிட்ட 43 மாணவர்கள் திடீ ரென்று வாந்தி எடுத்ததால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது. அவர்கள் சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீர் ஆகிய வற்றைப் பரிசோதனைக்காக சுகாதாரத்துறை அலுவ லர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாகவே குடிநீர் பற்றி புகார்கள் வந்து கொண்டி ருந்தன. இதனால் குடிநீர் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அந்தப்பகுதி மக்கள் எழுப்பியுள்ளார்கள். சுகாதாரத்துறையும்,  மாவட்ட நிர்வாகமும் கப் சிப் என்று வாயை மூடிக்கொண்டிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையில் பெற்றோர்களும், பகுதி மக்களும் உள்ளனர்.

தண்ணி - 4

227 வார்டு கவுன்சிலர்களைக் கொண்ட மும்பை மாநகராட்சியில் பெரும் தில்லுமுல்லுகளைச் செய்தும் 89 வார்டுகளைத்தான் பாஜகவால் கைப்பற்ற முடிந்தது. 29 கவுன்சிலர்களைப் பெற்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜக வுக்கு தண்ணி காட்டத் தொடங்கினார். அவர்களைச் சேர்த்தால்தான் பெரும்பான்மை என்ற நிலைமை. பாஜக யோசித்தது. மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, ‘இப்படி முரண்டு பிடித்தால் அந்தத் தேர்தல்களில் தனித்து விடப்படுவீர்கள்’ என்று எச்சரித்தது. ஏக்நாத் ஷிண்டே இறங்கி வந்துள்ளார். ஆனாலும், வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. சிவசேனா(உத்தவ் தாக்கரே) மற்றும் காங்கிரசோடு ஷிண்டே கைகோர்த்தால், 75, 000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடும் மும்பை மாநகராட்சி பாஜக கையில் சிக்காது. தன்னை மீறிக் கவுன்சிலர்கள் போய் விடுவார் கள் என்ற அச்சத்தில்தான் கடந்த சில நாட்களாக அவர்களைக் கடத்திக் கொண்டு போய் ஓட்டலில் அடைத்து வைத்துள்ளார் ஷிண்டே.