இராஜபாளையத்தில் போராட்டம்
இராஜபாளையம், ஜன.21- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அரசு பேருந்து போக்குவரத்து கழக பணிமனை முன்பு, சிஐடியு, ஏஐடியுசி மற் றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தலைவர் ஆர்.முத்துராஜ் மற் றும் சண்முகவேல் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பணியாளர் சம் மேளனம் சார்பில் ராமசாமி, ஏஐடியுசி சார்பில் மாரியப்பன், ஓய்வு பெற்றோர் சங் கம் சார்பில் சங்கரையா, ராஜாராம் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
