மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
திருப்பூர், ஜன.21- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 43 மாற்றுத்திறனாளிக ளுக்கு புதனன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனா ளிகள் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்கள் சுய தொழில் முனைவோர்களாக மாற்றவும் பல்வேறு உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தையல் இயந்திரம் பெற தகுதியான 20 நபர்களுக்கு தையல் இயந்திரங்கள், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசி மற்றும் 3 பேருக்கு வீல்சேர் ஆகியவை வழங்கப்பட்டது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டு, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்களால் பயனா ளிகளுக்கு வழங்கப்பட்டது.
