ஜெருசலேம் ஐ.நா தலைமையகத்தை இடிக்கும் இஸ்ரேல்
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா நிவாரண மற்றும் பணிக ளுக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தை புல்டோசரால் இடிக்கும் பணிகளை இஸ்ரேல் அரசு துவங்கி யுள்ளது. காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில், இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் கட்டாய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை உதவிகளை ஐ.நா அவை வழங்கி வருகின்றது. இந்த உதவிகளை இஸ்ரேல் தொ டர்ந்து தடுத்து வருகின்றது. இச்சூழ லில் ஐ.நா அவையின் நிவாரணம் மற்றும் பணிகளுக்கான அமைப்பு, பாலஸ்தீ னர்கள் மற்றும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் அரசு நீண்டகாலமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறி வருகின்றது. மேலும், அந்த அமைப்புக்கு எதிரான நட வடிக்கைகளை மேற்கொள்ள புதிய சட்டங்களை இஸ்ரேல் அரசு நிறை வேற்றியுள்ளது. இந்த நிலையில் தான் கிழக்கு ஜெருச லேமில் அமைந்துள்ள ஐ.நா நிவாரணம் மற்றும் பணிகளுக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தை செவ்வா யன்று (ஜன. 20) முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் அங்குள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை வெளியேற்றி விட்டு அந்த வளாகத்திலுள்ள கட்ட டங்களை புல்டோசரால் இடிக்கும் பணி களைத் துவங்கியுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஐ.நா அமைப்பின் மீதான தாக்குதல். சர்வதேச சட்டமீறல் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
