பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
அதிகப்படியான காற்று மாசுபாட்டால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வேலை செய்ய முடியாத 2.4 லட்சம் தினக்கூலித் தொழிலாளர்களில், 30,000 பேருக்கு மட்டுமே தில்லி அரசாங்கத்தால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்
பாஜகவின் ஒழுக்க நடவடிக்கைக்கும் பங்குச்சந்தைக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. இரண்டுமே பெரும் சரிவில் இருக்கின்றன. இரண்டாலும் நாட்டு மக்களுக்குதான் பெரும் இழப்பு.
ஊடகவியலாளர் ஷகீல் அக்தர்
ஒன்றிய அரசு இன்னும் சில தினங்களில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், பங்குச் சந்தை மிகப் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பொருளாதாரம், வெற்று வாக்குறுதிகளை கொண்டு இயங்குவதில்லை. போலி ஜிடிபி (GDP) கணக்குகள், வாலாட்டும் வட இந்திய ஊடகத்துக்கு பயன்படலாம். முதலீட்டாளர்களுக்கு பயன்படாது.
ஆர்ஜேடி செய்தித்தொடர்பாளர் டாக்டர் காஞ்சனா
டாலருக்கான ரூபாயின் மதிப்பு 91 ஆகியிருக்கிறது. வரலாற்றிலேயே மிக மோசமான ரூபாய் மதிப்பு இதுதான். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதைப் பற்றி பேச மாட்டார்கள். அவர்கள் மத போதையை கொடுத்து உங்களை மயக்கத்தில் வைத்திருப்பார்கள்.
