தேசிய தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு
இராமநாதபுரம், ஜன.21- பீகார் மாநிலம் பாட்னா வில் நடைபெற்ற அரசுப் பணி யாளர்களுக்கான தேசிய தட களப் போட்டியில், இராம நாதபுரம் மாவட்டம் பரமக் குடியைச் சேர்ந்த ஆசி ரியை மரிய ஆக்னஷ் பசு மலை 200 மீட்டர் ஓட்டப்போட் டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு பாரா ட்டு விழா இராமநாதபுரம் மக் கள் நூலகத்தில் நடைபெற் றது. மக்கள் நூலகத் தலை வர் செ.சந்தியாகு தலைமை யில் நடைபெற்ற இவ்விழா வில், செயலாளர் சி.பசுமலை வரவேற்புரையாற்றினார். விழாவில் வைகைப் பாசன விவசாய சங்கத் தலை வர் மு.மதுரைவீரன், தமிழ் நாடு அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கு. காந்தி, மு.வ.செந்தில்ராமு, தடகளப் பயிற்சியாளர் கி. அருண் சிலம்பு, ஆசிரியர் அ. சண்முகவேல், முன்னாள் தலைமை ஆசிரியர் ப.சந்திர போஸ், பிஎஸ்என்எல் ஊழி யர் வே.சேதுராஜன், செயற் குழு உறுப்பினர் செ.சிங்க ராயர், மின் பணியாளர் சிங்க துரை, கணினி மைய உரிமை யாளர் ஏ.கருணாகரன், ஆசி ரியைகள் க.சரவணபூபதி, ஆர்.ஜமீலா, ஆரோக்கிய மேரி, தேசிய பஞ்சாலை கழ கத்தைச் சேர்ந்த ஆர்.பாலு, ஆர்.ஜெய்சங்கர் உள் ளிட்டோர் கலந்து கொண்டு ஆசிரியை மரிய ஆக்னஷ் பசுமலைக்கு வாழ்த்து தெரி வித்தனர். விழாவின் நிறைவாக மக்கள் நூலகப் பொருளா ளர் வே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
