states

img

ஆதிவாசிகள் உரிமைக்காக சிபிஐ(எம்) நடத்திய 50,000 பேர் பங்கேற்ற பேரணி பால்கர் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற உண்ணாவிரதம்

ஆதிவாசிகள் உரிமைக்காக சிபிஐ(எம்) நடத்திய 50,000 பேர் பங்கேற்ற பேரணி  பால்கர் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற உண்ணாவிரதம்

பால்கர் (மகாராஷ்டிரா)  நிலம், வாழ்வாதாரம் மற்றும் ஆதிவாசி களின் உரிமைகளுக்கான போராட்ட மாக மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தலைமையில் 50,000 பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த போரா ட்டம் மேனர் பகுதியில் இருந்து தொடங்கி பால்கர் நகரை நோக்கி திரண்ட பின்னர், ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. ஆதிவாசி சமூகத்தினரின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் தவறி யதால், பால்கர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிலம், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத நிர்வா கத்தின் அலட்சியத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட்  கட்சியும், ஆதிவாசி உரிமை மன்றமும் இணை ந்து இந்த போராட்டத்தை ஒருங்கி ணைத்துள்ளன. 50,000 பேரின் பங்கேற்புடன்  வலிமை பெற்ற போராட்டம் மேனர் நகரில் இருந்து தொடங்கிய இந்த பேரணி கட்சியின் மாநிலச் செயலாளர் ஆஷிஷ் கோட்வால், மாவட்டச் செயலாளர் விநய் துபே ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றதன் மூலம் வலிமை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, டாக்டர் விஜூ கிருஷ்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். பால்கர் நகரை நோக்கி அணிவகுத்துச் சென்று, ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர். அங்கு கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.  இந்த போராட்டத்தில் 50,000 பேர் பங்கேற்ற தாக போராட்ட அமைப்பாளர்களும், ஆதிவாசி உரிமை மன்ற தலைவர் பிரகாஷ் பவார் தெரி வித்துள்ளனர். பேரணியில்  ஆதிவாசி கிசான் சங்கம், மகாராஷ்டிரா ராஜ்ய தலித் மற்றும் ஆதி வாசி சங்கடன நிவாரண் மன்றம், வொர்லி ஆதிவாசி சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட ஆதிவாசிகள் தங்களது பாரம்பரிய உரிமைகளை வலியு றுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். “நிலம் எங்கள் உரிமை”, “ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை காப்போம்”, “காடுகளின் உரி மையாளர்கள் நாங்கள்” என்ற கோஷங்க ளுடன் அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.  பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த போராட்டக் காரர்கள், தங்களது உரிமைகளுக்காக போராடுவதில் உறுதியுடன் இருப்பதை வெளிப்படுத்தினர்.  ஆட்சியர் அலுவலக முற்றுகை மற்றும் நெடுஞ்சாலை மறியல் நிர்வாகத்தின் அலட்சியத்தால் கொதிப்ப டைந்த போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலு வலக முற்றுகை மட்டுமல்லாமல், பால்கர்-போய்சார் தேசிய நெடுஞ்சாலையையும் முற்று கையிட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கி யது.  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரை யற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டது. சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர் சுஜாதா  ஜாதவ், மாவட்டக் குழு உறுப்பினர் ரமேஷ்  மோரே ஆகியோர் தலைமையில் உண்ணாவிர தம் முன்னெடுக்கப்படுகிறது. இரவு பகலாக அங்கேயே தங்கி போராடும் உறுதியுடன் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் கூடாரங்கள் அமைத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை எந்த சூழ்நிலை யிலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். நிர்வாக அலட்சியத்தை கண்டித்த சிபிஐ(எம்) தலைவர்கள் நிர்வாகம் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்த தெருவில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஆஷிஷ் கோட்வால் விமர்சித்துள் ளார். தங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தும், அரசாங்க அதிகாரிகளை சந்தித்தும் பயனில்லை என்று அவர் கூறினார். நிர்வாகம் ஆதிவாசிகளின் பிரச்சனைகளை புறக்கணித்து வருவதாகவும், இதனால் மக்கள் போராட்டத்தி ற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஆதிவாசி உரிமை மன்ற தலைவர் பிரகாஷ் பவார் பேசுகையில், “வன உரிமைச் சட்டம் 2006 முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளுக்கு இன்னும் நில பட்டா வழங்கப்படவில்லை. இது அரசியல மைப்பை மீறுவதாகும்” என்று தெரிவித்தார். சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் விநய் துபே கூறுகையில், “பால்கர் மாவட்டத்தில் மட்டும் 15,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் நில உரிமை இல்லாமல் அவ திப்படுகின்றன. அவர்களது முன்னோர்கள் பல தலைமுறைகளாக வாழும் நிலத்தில் கூட அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.