states

img

“அஜித் பவார் மகன்  கைது எப்போது?”

“அஜித் பவார் மகன்  கைது எப்போது?”

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் துணை முதல மைச்சராக உள்ள அஜித் பவார் (தேசிய வாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தவர்) மகன் பார்த் பவார் ரூ.1,804 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை, அடிமாட்டு விலைக்கு (ரூ. 300 கோடிக்கு) வாங்கினார். இந்தவிவகாரம் தொடர்பாக பார்த் பவாருக்கு நிலம் வாங்க உதவிய ஷீத்தல் தேஜ்வானி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால்  நிலம் வாங்கிய பார்த் பவார் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “இந்தியா” கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் அம்ப தாஸ் தான்வே,”புனே நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி (அஜித் பவார் மகன் பார்த் பவார்) ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர் பாக அவர் மேலும் கூறுகையில்,”புனே நில மோசடி வழக்கில் ஷீத்தல் தேஜ்வானி கைது செய்யப்பட்டுள்ளார். நிலத்தை  கொடுத்த நபர் கைது செய்யப்பட்டி ருந்தால், அதை வாங்கிய நபர், அவரது கூட்டாளி ஏன் கைது செய்யப்பட வில்லை? பார்த் பவார் வழக்கில் பதிலளிக்க விசாரணை அமைப்பு இன்னும் எத்தனை நாட்கள் நீட்டிப்பு விளையாட்டைத் தொடரும்? அமீடியா நிறுவனத்தில் 1 சதவீத பங்குதாரர் மட்டுமே உள்ள திக்விஜய், 99 சதவீத பங்குதாரரான பார்த் பவாரின் ஒப்புதல் இல்லாமல் கையெழுத்திடும் அதிகாரியாக மாறி னாரா? முத்திரை வரியை தள்ளுபடி செய்த அதிகாரிகளின் பெயர்களை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? அரசியல் அழுத்தம் இல்லாமல் இந்தக் கட்டண விலக்கு சாத்தியமில்லை. துணை முதலமைச்சர் அஜித் பவா ருக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்வது மக்களை பைத்தியமாக்கு வதாகும்” என கண்டனம் தெரிவித்தார்.