states

img

ஊரக வேலையில் முன்மாதிரியாக கேரளம் 55.41 கோடி வேலை நாட்கள் வழங்கி அசத்தல்

ஊரக வேலையில் முன்மாதிரியாக கேரளம் 55.41 கோடி வேலை நாட்கள் வழங்கி அசத்தல்

திருவனந்தபுரம் ஒன்றிய அரசின் நிதி தொடர்ந்து குறைக் கப்பட்ட போதிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையி லான இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேர ளம் திகழ்கிறது. தற்போது 19.44 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன. 2020-21 முதல், 53.5 கோடி வேலை நாட்கள்  உருவாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு ரூ.17,216.57 கோடி ஊதியமாக வழங்கப் பட்டுள்ளது. முழுமையாக மாநில அரசால் செயல் படுத்தப்படும் அய்யன்காளி நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில், ஐந்து ஆண்டு களில் 1.91 கோடி வேலை நாட்கள் உருவாக்கப் பட்டுள்ளன. நகராட்சிகள் ரூ.634.01 கோடியை செலவிட்டுள்ளன. 3.25 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி யாக உள்ளன. சமூக தணிக்கை மிகவும் திறம்பட செயல்படுத்தப் படுகிறது. அனைத்து பட்டியல் பழங்குடி குடும்பங்க ளுக்கும் 200 வேலை நாட்கள் கேரள பழங்குடி பிளஸ் திட்டத்திற்காக, மாநில பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் சுபிக்‌ஷா கேரளா மற்றும் சுசித்ர கேரளாவுடன் இணைக் கப்பட்டது. இதன் மூலம், நில மேம்பாடு, நீர்ப்பா சனம், பணிக்கூடங்கள் கட்டுதல், மாட்டுத் தொழுவங்கள், ஆட்டுத்தொழுவங்கள், கோழி கூடுகள், மீன் குளங்கள், தீவன புல் வளர்ப்பு, உரம் தயாரிக்கும் முறை போன்றவை மேற் கொள்ளப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன. 2020-21ஆம் ஆண்டில் ஆண்டு தொழிலா ளர் பட்ஜெட் ரூ.10 கோடியாக இருந்தது, ஆனால்  2025-26 இல் ஒன்றிய அரசு அதை ரூ. 5  கோடியாகக் குறைத்துவிட்டது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான தொகையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே ஒதுக்கப்படு கிறது. கேரளாவில் மட்டுமே அதிகமான குடும் பங்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கி றது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களில் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. 3,411 கி.மீ., சாலைகள் கேரளாவில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூலம் 19.44 லட்சம் குடும்பங்க ளுக்கு 53.5 கோடி வேலை நாட்கள்  அளிக்கப்பட்டது. அதே போல அய்யங்காளி நகர்ப்புற திட்டம் மூலம் 3.25 லட்சம் குடும்பங்க ளுக்கு 1.91 கோடி வேலை நாட்கள் அளிக்கப் பட்டது. இதன் கீழ் 5ஆண்டுகளில் 3411.61 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டது ; 37 கிராம சந்தைகள் கட்டப்பட்டன ; 1,15,883 குடும்பங்க ளுக்கு தனிப்பட்ட வாழ்வாதார சொத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன ; 4,100 ஹெக்டேர் தரிசு நிலம் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றப்பட்டது ; 2024-25ஆம் ஆண்டில் 100 நாட்கள் வேலை நாட்களை நிறைவு செய்த 5.19 லட்சம் மக்க ளுக்கு ஓணம் பரிசாக ரூ.1,200 வழங்கப் பட்டது. இதற்கான மாநில அரசு செலவிட்ட தொகை ரூ. 64.95 கோடி. வேலைவாய்ப்பு உறுதித் தொழிலாளர் நல நிதி வாரியம் உருவாக்கப்பட்டது. 9,582 பேர் பதிவு செய்யப் பட்டனர். தேசாபிமானியிலிருந்து பிஜோ டோமி