ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களும் மாற்றுத் திறனாளிகள் தான் உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பெண் வழக்கறிஞர், “வாயில் ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்ட பெண்ணின் சார்பாக நான் ஆஜராகி உள்ளேன். 2009ஆம் ஆண்டு ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண், கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று குழாய் மூலம் உணவு உட்கொண்டு வருகிறார். 16 வரு டங்களாக இன்னும் வழக்கு முடிய வில்லை” என்று அவர் வாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த்,“2009ஆம் ஆண்டு வழக்கை இன்னும் முடிக்கவில்லையா? தலைநகர் தில்லியிலேயே இந்த நிலைமையா? இது மிகவும் அவமானம். ஆசிட் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து உச்சநீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும். ஆசிட் தாக்குதலில் பாதிக் கப்பட்டவர்களையும் மாற்றுத் திறனாளி கள் என்கிற வரம்பிற்குள் கொண்டு வர லாம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்க ளும் மாற்றுத் திறனாளிகள் தான். இதற்கு அவசர சட்டம் இயற்றலாம்” என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரலி டம் எடுத்துரைத்தார். மேலும் இதுதொடர்பாக பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு உத்தரவிட்டது. இறுதியாக உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஆசிட் தாக்குதல் வழக்குகளின் விப ரங்களை தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.