தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ரோகித்
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பெய்த கனமழையால், சினா நதியின் பல அணைகள் உடைந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பணப்பட்டுவாடா வேலை முடிந்த பின்பு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை காணவில்லை. அதிகாரம் மட்டுமே அவர்களின் ஒரே குறிக்கோள் ; மக்கள் நலன் அல்ல.
காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி அமைப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வது, எஸ்ஐஆர் மூலம் வாக்குகளை திருடுவது போன்ற 3 சடங்குகள் மூலமாக தான் பாஜக ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இவைகள் இல்லை என்றால் பாஜக ஒரு அதிகாரத்தில் நீடிக்க துளியளவு கூட வாய்ப்பு இல்லை.
ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் காஞ்சனா
எஸ்ஐஆர் காரணமாக பிஎல்ஓ-க்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக யாரிடம் புகார் செய்வது? தேர்தல் ஆணையத்திடமா? அல்லது எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையத்தை வழிநடத்தும் பாஜக அரசாங்கத்திடமா? தேர்தல் ஆணையம் வேலை செய்வதே பாஜகவுக்குதான்.
ஊடகவியலாளர் முகேஷ் குமார்
எஸ்ஐஆர் காரணமாக 50க்கும் மேற்பட்ட பிஎல்ஓ-க்கள் உயிரிழந்து விட்டனர். ஆனால் தேர்தல் ஆணையத்தின் ரத்தம் குடிக்கும் விருப்பம் இன்னும் தணியவில்லை.காரணம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சந்தோஷமாக இருக்கிறார். ஏனெனில் அவரின் முதலாளி ( பிரதமர் மோடி) அதைவிட சந்தோஷமாக இருக்கிறார்.
