“மாணவர்களின் தற்கொலையை தடுக்காமல் தேசிய பணிக்குழு என்ன செய்கிறது?”
நாடாளுமன்ற மாநிலங்கள வையில் செவ்வாயன்று “இந்தி யா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி யின் மனோஜ் ஜா மாணவர்களின் தற் கொலைச் சம்பவங் கள் அதிகரித்து வரு வது குறித்து கவ னத்தை ஈர்க்க உரை யாற்றினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தகவல் அறியும் உரிமைச் சட்ட பதி லின்படி, கடந்த 1.5 ஆண்டுகளில் மட்டும் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 40 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொழி, சாதி அல்லது நிதி நெருக்கடி சார்ந்த பாகுபாடுகளே இதற்கு முக்கிய காரணம் ஆகும். 2025ஆம் ஆண்டின் மாணவர் மனநலனுக்கான தேசிய பணிக்குழு (National Task Force) போதுமான வலி மையைக் கொண்டிருக்கவில்லை. கல்வி நிலையங்களில் நிலவும் அழுத்தங்கள் வெறும் கல்வி சார்ந்தது மட்டுமல்ல, அவை சமூகப் பாகுபாடுகளோடும் பின்னிப்பிணைந்துள்ளன. அரசு அமைத்துள்ள பணிக்குழுவின் பரிந்து ரைகள் அல்லது செயல்பாடுகள் இந்தத் தீவிரமான பிரச்சனையைத் தீர்க்கும் அளவுக்கு உறுதியானதாக இல்லை” என அவர் குற்றம்சாட்டினார்.
