states

img

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கரிலும் வாக்கு திருட்டு

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கரிலும் வாக்கு திருட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

போபால் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்  தீஸ்கரிலும் வாக்கு  திருட்டு அரங்கேற்றப்பட்டுள் ளது என மக்களவை எதிர்க்  கட்சித் தலைவர் ராகுல்  காந்தி குற்றம்சாட்டியுள் ளார். இதுதொடர்பாக மத்தி யப்பிரதேச மாநிலம் பஞ்ச்மர்  ணியில் அவர் மேலும் கூறு கையில்,”நாட்டில் வாக்கு திருட்டு நடந்துள்ளது என் பது மிகத் தெளிவாக தெரி கிறது. பாஜக ஆளும் ஹரி யானாவில் சுமார் 25 லட்சம்  வாக்குகள் திருடப்பட்டுள் ளன. அதாவது 8இல் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளது. தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியப்பிர தேசம், மகாராஷ்டிரா, சத்  தீஸ்கர் ஆகிய மாநிலங்களி லும் வாக்கு திருட்டு நடை பெற்றதாக நான் நம்புகி றேன். வாக்குத் திருட்டு தேர்தல்  ஆணையம் மற்றும் பாஜக வின் கூட்டு அமைப்பின் முறைகேடுகள் ஆகும். எங்க ளிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. விரைவில் அவற்றை  வெளியிடுவோம். உண்மை யான பிரச்சனை என்ன வென்றால் நாட்டில் ஜனநாய கம் தாக்கப்படுகிறது. அம் பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும்  தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ்குமார் ஆகி யோர் கூட்டு கூட்டாண்மை யை உருவாக்கி இதை நேரடி யாக செய்கிறார்கள். இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. இங்கு முக்கிய மான பிரச்சனை வாக்கு திருட்டுதான். வாக்கு திருட்டை மூடி மறைக்கவே எஸ்ஐஆர் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை நான் உறுதியாக கூறுவேன்” என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.