states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்

பீகார் தேர்தலுக்கு முன்னதாக, நவம்பர் 3 அன்று ஹரியானாவிலிருந்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு ரயில்களில் இருந்து 6,000 பேர் பீகாருக்கு பயணம் செய்தனர். சாத் பண்டிகை முடிந்த பின்பு இந்த சிறப்பு ரயில்கள் ஏன் இயக்கப்பட்டன? அதுவும் ஹரியானாவிலிருந்து இயக்கப்பட காரணம் என்ன?

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்

பாஜகவினர் வாக்குகளை திருடுவதில் வல்லவர்கள். தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின், எம்எல்ஏக்கள் என ஒவ்வொரு வீட்டிலும் தலா 33 வாக்குகள் பதிவாகின. அது எப்படி ஒரே வீட்டில் 33 வாக்குகள் பதிவாகும்? 4 - 5 பேர் இருக்கும் வீட்டில் எப்படி 33 பேர்?

பத்திரிகையாளர் கீதா சேசு

பத்திரிகையாளர் ராணா அய்யூப்பிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அரசியல்வாதி அல்லது கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் ராணா அய்யூப்பிற்கு பாதுகாப்பு வழங்க ஏன் மும்பை காவல்துறை யோசிக்கிறது? பத்திரிகையாளர்களின் வாழ்க்கை முக்கியமில்லையா?

காங்கிரஸ் மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய்

ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை பாட மாட்டார்கள். அதற்கு ஒரு வரலாறு உள்ளது. ஆனால் திடீரென வந்தே மாதரம் பாடல் மீது ஆர்எஸ்எஸ்-க்கு ஏன் இவ்வளவ் பாசம்? ஒருவேளை இந்து-முஸ்லிம் மோதலை உருவாக்க வந்தே மாதேரம் பாடல் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு தேவைப்படுகிறதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.