வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகண்ட்
இமயமலைச்சாரலில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் பெய்த கனமழைக்கு இடையே சகஸ்ரதாரா பகுதியில் (தலைநகர் டேராடூன்) மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் தாம்சா நதி நிரம்பி வழிந்து, சகஸ்ரதாரா, டேராடூன் புறநகர் உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்தன. டேராடூன் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இத்தகைய சூழலில், மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயுள்ளனர். (படங்கள் : வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் டேராடூன் பகுதிகள்)