உ.பி., கல் குவாரி இடிந்து ஒருவர் பலி; 15 பேர் மாயம்
உத்தரப்பிரதேச மாநிலம் சோன் பத்ரா மாவட்டத்தின் ஓப்ராவில் உள்ள கல் குவாரி ஞாயிறன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட் டுள்ளது. 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பலியானவர் பனாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜு சிங் (30) என காவல்துறை அடையா ளம் கண்டுள்ளது. மலையிலிருந்து விழுந்த கற்கள் மிகப் பெரியவை என்றும், கவனமாக வேலை செய்ய வேண்டியி ருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.