ஏலதாரர்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த ஏலத் தொகை காரண மாக 11 கனிம சுரங்கங்களின் நான் காவது சுற்று ஏலத் தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சலால்-ஹிம்னா லித்தியம், டைட்டா னியம் மற்றும் பாக் சைட் (அலுமினஸ் லேட்டரைட்) தொகுதி, ஜார்க்கண்டில் உள்ள முஸ்கானியா-கரேரியாதோலா-பர்வாரி பொட்டாஷியம் தொகுதி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள குறிஞ்சா குளம் (தென்காசி) கிராபைட் தொகுதி ஆகியவை மூன்று தொகுதிகள் மிக முக்கியமானவை ஆகும். இதே போன்று சத்தீஸ்கர் மற்றும் அருணாச்சலப் பிர தேசத்தில் உள்ள டங்ஸ்டன் மற்றும் குளு கோனைட் சுரங்கங்கள் உட்பட நான்கு தொகுதிகளின் ஏலமும் ரத்து செய்யப் பட்டுள்ளன.