நாட்டின் முக்கிய திரைத்துறை பிரிவுகளில் ஒன்றான மலை யாள திரையுலகம் ஒரே ஆண்டில் ரூ.700 கோடி அளவில் இழப்பை சந்தித்து உள்ளதாக செய்தி கள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக திரைப்படத் தயா ரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,”கேரளாவில் 2024ஆம் ஆண்டு 204 படங்கள் வெளி யாகின. அதில் 26 படங்கள் மட்டுமே நல்ல லாபம் ஈட்டியுள்ளன. ரூ.1000 கோடி செலவு செய்து வெறும் ரூ. 300 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஒரே ஆண்டில் சுமார் ரூ.700 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையாளத் திரையுலகம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இந்த நிலைமை தொடர்ந்தால் மலையாளத் திரையுலகம் பெரும் நெருக்கடியை சந்திக்கும்” என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.