ஒன்றிய பட்ஜெட் 2025இல் கேரளம் மீதான அணுகுமுறை மிகவும் ஏமாற்றமளிப்பதாக அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”அரசியல் ரீதியாக பிரதிபலிக்கும் பகுதிகளில் அதிக மான விசயங்கள் பட்ஜெட்டில் அனு மதிக்கப்பட்டுள்ளன. அனைவருக் கும் சமமான அணுகுமுறை பட்ஜெட் டில் இல்லை. கேரளத்திடம் சில நியாயமான கோரிக்கைகள் இருந்தன. கேரளத்துக்கு கிடைக்கவிருந்த சிறப்பு சலுகைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. வயநாடு பேரழிவுக்கான தொகுப்பு நியாய மாக இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது பரிசீலிக்கப்பட வில்லை. 2025 பட்ஜெட் முதலீடு, ஏற்றுமதி மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொள்கிறது. விழிஞ்ஞம் திட்டம் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய ஏற்று மதி ஊக்குவிப்புத் திட்டமாகும். அதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட பணம் எதுவும் ஒதுக்கப் படவில்லை. எந்த பெரிய நிறுவ னங்களுக்கும் அனுமதி இல்லை. ஐந்து ஐஐடிகளில் புதிய படிப்பு களைத் தொடங்குவது பற்றி மட்டுமே பட்ஜெட்டில் பேசப்பட்டு உள்ளது. 2025-26 நிதியாண்டில், மாநிலங் களுக்கு ரூ.25,01,284 கோடி வழங் கப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில், மாநிலத்திற்கு ரூ.73,000 கோடி கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு, மாநிலத் திற்கு மொத்தம் ரூ.32,000 கோடி கிடைத்தது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடு ரூ.5 லட்சம் கோடி அதி கரித்துள்ளது. கேரள மக்கள் தொகையின் விகிதாச்சாரமாகக் கணக்கிடும் போது, கூடுதலாக ரூ.14,288 கோடி கிடைக்க வேண் டும். ஆனாலும் பட்ஜெட் மதிப்பீட்டின் படி ஒதுக்கப்பட்ட ரூ.3000 கோடி முழு வதையும் கேரளம் பெறுமா என்பது சந்தேகமே. கேரளம் தனது தேவைகளுக் காக பிராந்திய வாதங்களை முன் வைக்கும் மாநிலம் அல்ல. தேர்தலை மனதில் கொண்டு பீகாரில் மேலும் பல திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் மீறி, வய நாடு, சூரல்மலை, முண்டக்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கும், விழிஞ்ஞம் துறைமுகத் திற்கும் சிறப்பு கவனம் செலுத்தப் படாதது வருத்தத்தையும் எதிர்ப் பையும் ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைகளை ஒன்றிய அரசு சரிசெய்யும் என்று கேரள மாநிலம் நம்புகிறது.
வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு இல்லை
பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதி ஆயோக் ஆய்வ றிக்கையில் கேரளம் உயர்ந்த இடத்தில் உள்ளது. உலகின் பிற பகுதிகளை விட கேரளம் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைந்து உள்ளது. கேரளத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட பல திட்டங் கள் ஒன்றிய பட்ஜெட்டில் நாடு முழு வதும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை கேரளத்தால் பெற முடியாது. பட்ஜெட்டில் ரூ.3.5 லட்சம் கோடி அதிகரிப்பு உள்ளது. இருப்பினும், அது விவசாயத் துறையின் தேவைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. உர மானியம் ரூ.3,400 கோடி குறைக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடும் அதி கரிக்கப்படவில்லை. பயிர் காப்பீடு ரூ.3500 கோடி குறைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு நியாய மான விலையை உறுதி செய்வதற் கான எந்த நடவடிக்கைகளையும் பட்ஜெட் பரிசீலிக்கவில்லை. வளர்ச்சியை ஆதரிக்கும் முதன்மை யான காரணி விவசாயத் துறை என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறிய போதிலும், பட்ஜெட்டில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதை விட ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ரூ.24,000 கோடி எதிர்பார்ப்பு ஒன்றிய பட்ஜெட் ஒதுக்கீட்டில் கேரளம் ரூ.24,000 கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பை எதிர் பார்த்துக் கொண்டிருந்தது. நாட்டின் மிக முக்கியமான துறை முகமாக மாறி வரும் விழிஞ்ஞத் திற்கு ரூ.5,000 கோடி சிறப்பு தொகுப்பு கோரப்பட்டது. விழிஞ்ஞத் திற்கு இதுவரை செலவிடப்பட்ட ரூ.8,500 கோடியில், ரூ.5,500 கோடி கேரளத்திற்கு சொந்தமானது. ஒன்றிய அரசு ஒதுக்கிய விஜிஎப் (செயல்பாட்டு இடைவெளி நிதி)-ஐ திருப்பிச் செலுத்தும் நிபந்தனையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை யும் இருந்தது. மாநிலம் செலவு செய்ததில் ரூ.6,000 கோடியை கடன் வாங்க அனுமதிக்குமாறும் ஒன்றிய அரசிடம் மாநிலம் கோ ரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது” என அவர் தெரிவித்தார்.