states

img

பழங்குடிப் பெண் கும்பல் பாலியல் வன்கொலை

பழங்குடிப் பெண் கும்பல் பாலியல் வன்கொலை

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்

இந்தூர் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு பெண் கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக  மோசமான அளவில் அதிகரித்து வரு கிறது. பாலியல் வன்கொடுமை சம்ப வங்கள் இல்லாத நாட்களே இல்லாத  சூழல் அம்மாநிலத்தில் உள்ளது. இந்நிலையில், மத்தியப் பிர தேசத்தின் கான்ட்வா மாவட்டத்தில் கல்வா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் சனிக் கிழமை அன்று காலை 45 வயதுமிக்க  பழங்குடியினப் பெண் ஒரு வீட்டு  முற்றத்தில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் கிடந்தார். உள்ளூர் வாசிகள் பழங்குடியினப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனு மதித்தனர்.  சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் பழங்குடியினப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ அறிக்கையில், உயிரிழந்த பெண் கும்பல் பலாத்காரம் செய்யப்  பட்டுள்ளதாவும், பாலியல் பலாத்கா ரத்தின் போது கடுமையாக தாக்கப் பட்டதில் அவரது அந்தரங்க உறுப்பு  முழுமையாக சேதமடைந்து அதீத  ரத்தப்போக்கு காரணமாக உயிழந்  துள்ளார் என செய்திகள் வெளியாகி யுள்ளன. 2 குழந்தைகளின் தாய் பாலியல் வன்கொலை செய்யப் பட்ட பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் கண்முன்னே பழங்குடியினப் பெண் ரத்த போக்கு டன் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி  சம்பவம் நாட்டையே உலுக்கியுள் ளது. இத்தொடர்பாக ஹரி, சுனில்  என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக டிஐஜி சித்தார்த் பகுணா தெரி வித்துள்ளார். ஆனால் மொத்தம் 2  பேர் பழங்குடியினப் பெண்ணை பாலி யல் பலாத்காரம் செய்தனரா? என்ற  கேள்விக்கு பதில் அளிக்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

திசைதிருப்பும் பாஜக அரசு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில்,”காணாமல் போன  நாளான வெள்ளியன்று பழங்குடியினப் பெண் கைது செய்யப்பட்ட  ஹரி, சுனில் உடன் இருந்தார். வெள்ளிக்கிழமை மாலை ஹரியின் வீட்டிற்குச் சென்று 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அதன்பிறகே இந்த  பாலியல் வன்கொலை நிகழ்ந்தது” என மத்தியப்  பிரதேச காவல்துறை  கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூர்வாசிகள் மறுப்பு வெள்ளிக்கிழமை அன்று திருமணத்திற்கு சென்ற பின் பழங்குடி யினப் பெண் காணாமல் போனார். 3க்கும் மேற்பட்டோர் பெண்ணை கடத்தி கொடுமை செய்து பாலியல் வன்கொலை செய்துள்ளனர் என  உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்னர். இதன்மூலம் பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொலை சம்பவத்தை திசைதிருப்பும் வேலையில் இறங்கியுள்ளது மத்தியப்  பிரதேச பாஜக அரசு

இரும்பு கம்பி, மரக் கட்டைகளை கொண்டு  கொடூரத் தாக்குதல் பழங்குடியினப் பெண் மயக்க நிலையில் மீட்கப்பட்ட வீட் டின் அருகில் குடியிருக்கும் நபர்  செய்தியாளர்களிடம் கூறுகை யில்,”பழங்குடியினப் பெண் வீட்டு முற்றத்தில் கடுமையான ரத்தப் போக்குடன் கிடந்தார். அந்தரங்க உறுப்பு முழுமை யாக சேதமடைந்து, குடல் மற்  றும் கருப்பை வெளியே கிடந்த  நிலையில் இருந்தார். பெண்ணை  சித்ரவதை செய்யப் பயன் படுத்திய ஒரு இரும்பு கம்பி, மரக்கட்டை அருகில் கிடந்தன” என அவர் கூறினார்.