states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்'

பாஜக நகராட்சித் தலைவராக இருக்கும் பாலக்காட்டில் பொது சுடுகாட்டில் சாதி அடிப்படையிலான இறுதிச் சடங்கு கூடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கியுள்ளது. இது பொது இடங்களில் சாதி பாகுபாடுகளை நிரந்தரமாக்கும் ஒரு பிற்போக்கான நோக்கத்தின் பகுதியாகும். பாஜக கேரளத்தை பின்னுக்குத் தள்ளி, சாதி பாகுபாடுகளையும் பழக்கவழக்கங்களையும் வலுப்படுத்த முயற்சிக்கிறது.

சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா

இந்தியா என்பது ஒரே தேசம் தான். அதாவது மாநிலங்களின் ஒன்றியம். பிரதமர் மோடி மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்தை மதிக்க வேண்டும். இதன் பொருள், அனைத்து மாநிலங்களுக்கும் அவற்றின் உரிமைகளும், அரசியல் அதிகாரமும் உண்டு என்பதாகும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ் தாக்கூர்

பெண்களுக்கு வீர குணங்கள் இல்லாததால் பஹல்காமில் பாதிக்கப்பட்டனர் என பாஜக எம்.பி., ராம் சந்தர் கூறியுள்ளார். பாஜக தொடக்கத்திலிருந்தே சுற்றுலாப் பயணிகளைக் குறை கூறும் முயற்சியில் உள்ளது. அதனால் தான் பெண்கள் மீது சாக்குப் போக்கு கூறி வருகிறது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை நாங்கள் ஏற்கிறோம். இது சரியான முடிவு என்று நாங்கள் நினைக்காவிட்டாலும், இந்த முடிவில் லாலு பிரசாத் உடன் இருக்கிறோம். தேஜ் பிரதாப்பின் தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.