கேரளத்தில் பலத்த மழை 5 பேர் பலி
கேரளாவில் சனிக்கிழமை அன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளே மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்க ளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதீத கனமழை புரட்டியெடுத்தது. சனிக் கிழமை அன்று திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் மண் சரிந்து மற்றும் படகு கவிழ்ந்து போன்ற விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ஞாயிறன்றும் கேரளா முழுவதும் அதே அளவில் பலத்த பெய் தது. காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்க ளில் சூறைக்காற்றுடன் அதீத அளவில் கனமழையும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மிதமான காற் றுடன் கனமழையும் பெய்தன. தமிழ்நாடு எல்லையில் மரம் முறிந்து இளைஞர் ஒரு வர் உயிரிழந்ததாக செய்திகள் வெளி யாகின. அதே போல கோழிக்கோட்டிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியகியுள்ளன. இதன்மூலம் கேரளா வில் கனமழைக்கு 2 நாட்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளி யாகியுள்ளன. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப் புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 11 மாவட்டங் கள் திங்கள்கிழமை அன்று அதீத கன மழையை எதிர்கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வயநாட்டில் தீவிர கண்காணிப்பு கடந்த ஆண்டு வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 420 பேர் பலியாகினர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரல்மலை, முண்டக்கை பலத்த மழை பெய்தது. கடந்த ஆண்டைப் போலவே பெரும் சேதம் ஏற்படக் கூடாது என்பது கருத்தில் கொண்டு வயநாடு மாவட்டம் முழுவதும் கேரள காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.