tamilnadu

img

62 ஆயிரம் சத்துணவு ஊழியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்!

62 ஆயிரம் சத்துணவு ஊழியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்!

திண்டுக்கல் மாநாட்டில் தீர்மானம் - மாபெரும் பேரணி

திண்டுக்கல், மே 25 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு  திண்டுக்கல் எல்.ஜி.பி. காம்பவுண்ட்டில் உள்ள கிறிஸ்தவ வன்னியர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமையன்று துவங்கியது. கருத்தரங்கம் முதல் நாளில் பிரதிநிதிகள் மாநா டும், அதைத்தொடர்ந்து கருத்தரங்க மும் நடைபெற்றது. கருத்தரங்கில், தமுஎகச மாநிலத் தலைவர் மதுக் கூர் இராமலிங்கம், மாதர் சங்கத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே. பாலபாரதி ஆகியோர் உரையாற்றினார். பேரணி - பொது மாநாடு மாநாட்டின் நிறைவாக ஞாயி றன்று மாலை, பல ஆயிரக்கணக் கானோர் பங்கேற்ற பேரணியும், அதன் நிறைவாக பொதுமாநாடும் நடைபெற்றது. குமரன் பூங்கா முன்பிருந்து பேரணியை முபாரக் அலி துவக்கி வைத்தார்.  மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற பொது மாநாட்டில் ம.சுகந்தி வரவேற்றார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி,  திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் மு. சீனிவாசன் நிறைவுரை யாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு முன்னதாக, மாநாட்டில் சங்கத் தின் மாநிலத் தலைவராக பி.செல்லத்துரை, மாநிலப் பொதுச்செயலாளராக ஆ. ஜெசி, மாநிலப் பொருளாள ராக சித்ரா ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.  தீர்மானங்கள் சத்துணவுத்துறையில் உள்ள 62 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; சிறப்பு காலமுறை ஊதியத்திற்குப் பதிலாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; சத்துணவு ஊழி யர்களுக்கு குடும்ப பாது காப்பு மற்றும் மற்றும் அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியமாக ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்; அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல சத்துணவுத் துறை பெண் ஊழியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்; காலைச் சிற்று ண்டி திட்டத்தை சத்துணவு ஊழி யர்கள் மூலம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.