tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, மே 25 - திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் திங்கட்கிழமை (மே 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் திங்கட் கிழமை கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆதார் அவசியம்

சென்னை, மே 25 - மாநில அரசுப் பணி யாளர் தேர்வாணைய தலை வர்களின் நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடை பெற்றது. இதில் 12 மாநில அரசுப் பணியாளர் தேர்வா ணையங்களின் தலைவர் கள் பங்கேற்றனர். இக்கூட்டத் தில், “யுபிஎஸ்சி தேர்வு களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யும் போது ஆதார் அவசியம் என்ற நடைமுறையை கொண்டு வர இருப்பதாக” தேர்வாணைய தலைவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். 

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

துதில்லி, ஜூன் 25 - 4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், காடி தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர் கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்எல்ஏ பயானி பூபேந்திர கந்துபாய், தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதியும் காலியாக உள்ளது. கேரளாவின் நிலம்பூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ பி.வி. அன்வர் ராஜினாமா செய்ததாலும், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மேற்குத் தொகுதி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி கோகி மற்றும் மேற்குவங்கத்தின் காளிகஞ்ச் எம்எல்ஏ நசிருத்தீன் அஹமது ஆகியோர் உயிரிழந்ததாலும் காலியாக உள்ளன.  இத்தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிறன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 23 அன்று நடைபெறுகிறது.  இதனிடையே, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

கால்நடை மருத்துவம்:  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 சென்னை, மே 25 - தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு திங்கட்கிழமை (மே 26) காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் 20 மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.