“மக்கள் மனங்களில் வாழும் மகத்தான தலைவர்
தனக்காகவோ தன் குடும்பத்தி ற்காகவோ வாழாமல் மக்க ளுக்காக வாழ்ந்த தலைவர் - இதுதான் தோழர் ஆர் கருப்பையாவின் வாழ்க்கைச் சாரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த மானவராக வாழ்ந்து காட்டியவர் தோழர் ஆர்.கே. 1952இல் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூரில் சிறு விவசாயிகளான ராஜு - வைரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஆர் கே. மிகுந்த வறுமையில் வாடிய குடும்பத்தில் இருந்து எழுந்து, கேரளத்தில் பாக்டம்பாசில் பணியாற்றிய பின்னர் எல்ஐசி ஊழியராகச் சேர்ந்தார். தனது குடிசை வீட்டிலேயே கிராம இளைஞர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் அளித்த தோழர் ஆர். கே, எல்ஐசி ஊழி யர் சங்கத்தில் முன்னணி உறுப்பின ராகச் செயல்பட்டார். ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்தார். ஜாதி பிரிவினையை எதிர்த்து, அனை த்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார மற்றும் சமூக நீதிக்காகப் போராடச் செய்தார். கைத்தறி தொழிலாளர்களின் நெருக்கடியை அறிந்து தனது சக தோழர்கள் 80 பேரைக் கைத்தறி உடை அணிய வைத்து அவர்களின் பொரு ளாதாரத் தேவையை நிறைவேற்றியது அவரது சமூக அக்கறையைக் காட்டு கிறது. சுனாமி, கஜா புயல், கொரோனா, வயநாடு நிலச்சரிவு என பல்வேறு இயற்கைப் பேரிடர்களில் மக்கள் சேவையில் முன்னின்றார். சிஐடியு, ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், அறி வியல் இயக்கம், எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைப் புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கி யதில் அவரது பங்கு முக்கியமானது. புதுகை பூபாளம் கலைக்குழுவை உரு வாக்கியதில் அவரது வழிகாட்டுதல் பிரதானமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகத் தேர்வான தோழர் ஆர்.கே, புதுக்கோட்டை மாவட்டச் செய லாளராக உயர்ந்தார். தீண்டாமை வன் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, அனைத்துப்பகுதி தோழர்களிடமும் தெளிவான பார்வையை உருவாக்கினார். இயக்கத் தோழர் என் கண்ணம்மா வைத் திருமணம் செய்துகொண்ட தோழர் ஆர் கே, தனது இணையருடன் சேர்ந்து சமூகப் பணிகளைத் தொடர்ந் தார். உடல்நலக் குறைவையும் பொருட் படுத்தாமல் 2006 நவம்பர் 3 வரை கட்சிப் பணியைத் தொடர்ந்தார். இந்நூலில் கே பாலகிருஷ்ணன், ஜி ராமகிருஷ்ணன், என் சீனிவாசன், எம் சின்னத்துரை உள்ளிட்ட கட்சித் தலை வர்களின் நினைவுகளும் இடம் பெற்றுள் ளன. “மக்களுக்காக வாழ்ந்த வாழ்க்கை” என்ற அவரது செய்தி இன்றும் இளம் தோழர்களுக்குப் பெரும் பாடமாக அமைகிறது.
“கற்றலுக்கு ஏது விடுமுறை...” ஒரு கல்வியாளரின் அனுபவக் களஞ்சியம்
கொரோனா வைரஸ் உலக மெங்கும் பரவி மனிதர் களை வீடுகளுக்குள் முடக்கிய கால கட்டம். பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை, அலுவலகங்கள் கூட செயல்படா மல் போன நிலையில், குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டது. பெற்றோர்களின் வேலையிழப்பால் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகரித்து, பல பகுதிகளில் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் எழுந்தது. இச்சூழலை அறிந்த தமிழக அரசு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் களஆய்வு நடத்தி, “இல்லம் தேடி கல்வி” திட்டத்தைத் தொடங்கியது. களச் செயல்பாட்டாளர்களுக்குப் பயிற்சியளித்து “வானவில் மன்றங் களை” உருவாக்கி, மாலை நேரப் பள்ளி கள் மூலம் தொடர்கல்வி வழங்கப் பட்டது. இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட சிறந்த கல்வியாளர் முனைவர் என் மாத வன் தனது அனுபவங்களையே இந் நூலாக வடித்துள்ளார். மூன்று அத்தி யாயங்களில் 34 கட்டுரைகள் கொண்ட இந்நூல் குழந்தைமை, கொள்கைகள், களச் செயல்பாடுகள் என முழுமையான கல்விக் கண்ணோட்டத்தை வழங்குகிறது. ‘தாய்மொழித் தயக்கம்’ குறித்த ஆசிரியரின் கவனிப்பு மிக முக்கிய மானது. குழந்தைகள் பேசும்போது வார்த்தைகள் தடுமாறினால், நாம் “அப்படி இல்லை, இப்படி” என்று இடையூறு செய்வதால் அவர்களுக்கு மொழித் தயக்கம் ஏற்படுகிறது. அவர் களைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, நிகழ்வுகளைக் கண்காணிக்க வைப்பதன் மூலம் பொது அறிவை வளர்க்க முடியும். ‘குழந்தைகளின் கற்பனை வளம்’ மிக முக்கியமானது. அவர்கள் தங்கள் உள வியல் தேவைகளை கற்பனையின் துணைகொண்டு நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இன்றைய கைபேசி வெறித்தனத்தால் பெற்றோர்-குழந்தைகள் இடையிலான தொடர்பு அரிதாகிவிட்டது. குழந்தை முதல் பெற் றோர் வரை அனைவரும் அதிக நேரம் கைபேசியிலேயே செலவிடுகிறார்கள். அருகாமைப் பள்ளிகளின் முக்கி யத்துவத்தை வலியுறுத்தும் ஆசிரியர், தூரப் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் அதிகாலையில் எழுந்து அவசர அவசரமாக வீடு திரும்புவதால் உடல்-மன நிலை பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரோக்கியமான சத்தான உணவு, கதை சொல்லுதல், நூல் வாசிப்பு, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் போன்றவை குழந்தை வளர்ச்சிக்கு அவசியம். ஆண்-பெண் நட்பு குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றி, வரம்புக்கு ள்ளான நட்பை ஊக்குவிக்க வேண்டும். பெண் குழந்தைகளிடம் துணிவையும் சமூக நம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். பதின்ம வயதினரின் சினிமா மோகத்தையும் கட்டுப்படுத்த பெற்றோர் பங்களிப்பு அவசியம். இணைய வழிக் கல்வி இன்று அடிப் படைத் தேவையாகிவிட்டது. வகுப்பறை யைத் தாண்டிய கற்றல் அதிகரித்துள் ளது. கணினியும் இணையமும் தகவல் களை விரிவாக வழங்கினாலும், நாம் குழந்தைகளைக் கண்காணித்து ஒழுக்க நன்னெறிகளைப் புகுத்த வேண்டும். கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முனைவர் மாதவன், தனது பல நூல்களில் அனுபவப் பகிர்வு களை வழங்கியுள்ளார். இந்நூலும் அந்த வரிசையில் திறம்படக் கொண்டுவரப் பட்டுள்ளது. கல்வியாளர்கள், ஆசிரி யர்கள், பெற்றோர்களுக்கு இந்நூல் அவ சியப் பயன்பாட்டுக் கல்வி வழிகாட்டி. வாழும் தலமெங்கும் வகுப்பறைகள் ஆசிரியர்: முனைவர் என் மாதவன் வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை-600018 விலை: ₹150- தொடர்பு:04424332924