tamilnadu

img

பன்னியாண்டி சமூகத் தலைவர்கள் சந்திப்பு

பன்னியாண்டி சமூகத் தலைவர்கள் சந்திப்பு

தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை மாநிலக்குழு அலுவலகத்தில் புதனன்று சந்தித்தனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதுமுள்ள பன்னியாண்டி சமூக மாணவ - மாணவியர்க்கு பட்டியல் வகுப்பினர் (SC) சாதிச் சான்று வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் படி கேட்டுக் கொண்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பா. செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.