இஸ்ரேல் திரைப்பட விழாவை தடை செய்ய வேண்டும்!
தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, மே 25 - இஸ்ரேல் திரைப்பட விழாவிற்கு தமிழகத்தில் அனுமதி வழங்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலை தளப் பக்கத்தில் பெ. சண்முகம் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல். அத்தியா வசிய பொருட்களைக் கூட தடைசெய்து அமெரிக்கா ஆதரவுடன் மக்களைப் பட்டினி போட்டு கொலை செய்யும் மனித விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது. இத்தகையை கொடூரமான இஸ்ரேல் நாட்டின் திரைப்பட விழா தமிழ்நாட்டில் நடைபெற அனுமதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது இஸ்ரேலின் மனித உரிமை மீறல் களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவே கருதப்படும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடி யாக இஸ்ரேல் திரைப்பட விழாவை தடை செய்ய முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மன்னருக்கு ஒரு நியாயம், விவசாயிகளுக்கு வேறொன்றா? இதேபோல மற்றொரு கருத்துப் பதிவில், “மைசூர் அரண்மனைக்குச் சொந்தமான 15.39 ஏக்கர் நிலம், சாலை விரிவாக்கத்திற்காக கர்நாடக மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு உள் ளது. இதற்கு இழப்பீட்டு தொகையாக 3400 கோடி ரூபாய்- அதாவது ஏக்க ருக்கு 220 கோடி ரூபாய் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, பணமும் மன்னர் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், நாடு முழுவதும் பல்லாயிரக் க்கணக்கான விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பல்லாண்டு காலமாகியும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் நீதிமன்றங் களுக்கு அலைந்தும்- ஏராளமானோர் மரணமடைந்தும் விட்டனர். மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளே, இவர் களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்றும் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.