மாநிலம் முழுவதும் 700 மருந்தாளுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பேரவை வலியுறுத்தல்
வேலூர், மே 25 - தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. காட்பாடியில் ஞாயிறன்று (மே 25) நடை பெற்ற பேரவைக் கூட்டத்தில் கொடியேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக வே.விஜயகுமரன், பொதுச் செய லாளராக உ.சண்முகம், பொருளாளராக கே. இளங்கோ உள்ளிட்ட 17 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரவையைத் துவக்கி வைத்தார். வரவேற்புக்குழுத் தலைவர் தெ.தே.ஜோஷி வரவேற்புரை வழங்கினார். முக்கியக் கோரிக்கைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில், காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் வழங்குதல், நோயாளிகள் எண்ணிக் கைக்கேற்ப கூடுதல் பணியிடங்கள் உருவாக்கு தல் ஆகியவை அடங்கும். மேலும் 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணியமர்த்தப்பட்ட மருந்தாளுநர்க ளின் பணி வரன்முறையை முறைப்படுத்துதல், 46 சுகாதார அலுவலகங்களில் தலைமை மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்குதல், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் மருந் தாளுநர் பணியிடங்கள் ஏற்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. மூன்று நாட்கள் போராட்டம் ஜூன் 25, 26, 27 ஆகிய நாட்களில் தமிழ் நாடு முழுவதும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது என்றும், ஜூன் 27இல் முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜூலை 24 இல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஜூலை 9 இல் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத் தில் பங்கேற்பது, செப்டம்பர் 18 இல் சென்னை யில் பெருந்திரள் முறையீடு இயக்கம் ஆகிய வையும் திட்டமிடப்பட்டுள்ளன. பேரவையில் மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கோ.வெங்கோ பராவ், மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க பொதுச் செயலாளர் த.ஏழுமலை, செவிலி யர்கள் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் நே.சுபின் உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலை வர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்டத் தலைவர் சு.சண்முகம் நன்றியுரை வழங்கினார். முன்னதாக அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, சில்க்மில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேர ணியைத் துவக்கி வைத்தார்.