பீகாரில் தடம் புரண்ட ரயில் பீகாரின் ஜமுய் மாவட்டத்தின்
லஹாபோன் மற்றும் சிமுல்தலா இடைப்பட்ட மார்க்கத்தில் சரக்கு ரயில் சென்று கொண்டு இருந்தது. சனிக் கிழமை இரவு 11:25 மணியளவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நல்வாய்ப்பாக விபத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனாலும் லஹாபோன் - சிமுல்தலா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் சிரமப் பட்டனர். விபத்து நடந்த இடத்திற்கு அசன்சோல், மதுபூர் மற்றும் ஜாஜா நிலையங்களில் இருந்து விபத்து நிவா ரண ரயில்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
