புதுதில்லி, நவ. 13 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்த லில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்வைக் கண்டு வருகிறது. முதலீட்டா ளர்கள் அமெரிக்க சந்தைகளில் தங்க ளின் முதலீட்டை அதிகரிக்கத் துவங்கியுள்ளனர். இந்திய சந்தைகளிலிருந்தும் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பானது, புதன்கிழமை யன்று (நவ.13) தொடர்ந்து 10-ஆவது நாளாக சரிந்தது. அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு திங்களன்று 84.38 காசுகளாக இருந்த நிலையில், செவ்வாயன்று மேலும் 2 காசுகள் குறைந்து 84.40 ஆக வீழ்ச்சி கண்டது. டாலருக்கு இணையான ரூபாய் கடந்த அக்டோபர் 1 அன்று 83 ரூபாய் 80 காசுகளாக இருந்தது, தற்போது நவம்பர் 13 அன்று 84 ரூபாய் 38 காசுகளாக- சுமார் 58 காசுகள் சரிந்துள்ளது. தொடர் வீழ்ச்சியைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தம்மிடமுள்ள அந்நிய செலாவணி கையிருப்பை எடுத்து சூறையாட வேண்டும் என்பது, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது நடக்காத பட்சத்தில் இந்திய சந்தைகளிலிருந்து வெளியேறும் முடிவை முதலீட்டா ளர்கள் எடுப்பார்கள், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அடிவாங்கும் பங்குச் சந்தைகள் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி அதன் 52 வார உச்ச அளவான 26,277-லிருந்து 10 சதவிகிதம் சரிந்துள்ளது. இதேபோல் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதன் வரலாற்று உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 8,300 புள்ளிகள் சரிந்துள்ளது.