காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
விலைவாசி உயரவில்லை, பணவீக்கம் அதிகரிக்கவில்லை, வேலையின்மை பிரச்சனையே இல்லை எனக் கூறும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த உலகத்தில் வாழ்கிறார் எனத் தெரியவில்லை.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக தலைமையிலான அரசாங்கங்களின் கீழ் நடந்த முக்கிய முறைகேடுகளுக்கு எதிராக மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குரல் எழுப்பவில்லை. அவர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன?
வழக்கறிஞர் அபா சிங்
பாலின நீதியைப் பற்றி நாம் பேசும் நேரத்தில் நடிகர் சிரஞ்சீவி தனது பாரம்பரியத்தைத் தொடர பேரன் மட்டும் வேண்டும் (பேத்தி வேண்டாம்) என்று சொல்லி யிருக்கிறார். இது பெண்களின் வெற்றியை நீர்த்துப்போகச் செய்கிறது. காலங்காலமாக அரசுத் திட்டங்களுக்குப் பிறகு, பெண் சிசுக்கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. சிரஞ்சீவியின் கருத்து கண்டனத்துக்கு உரியது.
செஸ் வீரர் அர்ஜுன் எரிகைசி
கிராண்ட்மாஸ்டர், சர்வதேச மாஸ்டர் பட்டங்கள் வெல்வோருக்கான ரொக்கப் பரிசு நிறுத்தப்பட்டது பொருத்தமான முடிவு அல்ல. நிச்சயம் அது செஸ் போட்டியாளர்களை பாதிக்காது. ஏனெனில் அதில் விளையாடுவோர் பணத்தை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. ஆனால் ஒன்றிய அரசின் இந்த முடிவு நிச்சயம் அவர்களின் பெற்றோரை பாதிக்கும்