வடமாநிலங்களில் மீண்டும் குளிர் வாட்டி வருகிறது.ஹரி யானா, உத்தரகண்ட், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங் களில் ஜம்மு- காஷ் மீர், இமாச்சலப்பிர தேச மாநிலங்களைப் போன்று பனிப்பொழி வுக்கு நிகராக மூடு பனி நிலவி வருகிறது. தில்லியில் மூடுபனி காரணமாக விமா னங்கள், ரயில்கள் தாமதம் மற்றும் ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களின் பெரும்பாலான பகுதிகள் அடர் மூடுபனியால் இயல்புநிலையை இழந்துள்ளன. மக்கள் மதிய நேரங்களில் மட்டுமே வெளியே வருவதால் வட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்கு விதிக்கப்பட்ட பகுதிகள் போல காட்சி அளிக்கிறது. குறிப்பாக கிழக்குப் பகுதி மாநிலங்க ளான மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநி லங்களிலும் கடுமையான அளவில் குளிர் வாட்டி வருகிறது. மேற்கு வங்க மாநி லம் சைந்தியா மற்றும் ஒடிசாவின் பூரி உள்ளிட்ட பகுதிகளின் ரயில் நிலை யங்கள் மூடப்படும் அளவிற்கு அங்கு மூடுபனி நிலவி வருகிறது. முடங்கியது கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வு மூடுபனி காரணமாக முடங்கி யுள்ளது. கடும் குளிர் காரணமாக சூரி யன் அஸ்தமன நேரத்தில் திரிவேணி சங்க மத்தில் புனித நீராடும் நிகழ்வை பக்தர்கள் புறக்கணித்தும், குளிர் குறைந்த பின்பே நதிகளில் நீராடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.