அதானிக்கு எதிராக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புகார்
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை சர்வதேச விமான நிலை யம் பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பரான அதானி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமான நிலையத்தில் செல்போன் சேவைக்கான உள்கட்ட மைப்புகளை அமைப்பதில் அதானி குழு மத்திற்கும், நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பிரதமர் மோடியின் மற்றொரு நெருங் கிய நண்பரான அம்பானியின் ரிலை யன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய சிஒஏஐ (COAI - Cellular Operators Association of India) அமைப்பு,”நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்குள் சொந்தமாக சிக்னல் கோபுரங்கள் மற்றும் “இன்-பில்டிங் சொல்யூஷன் (IBS)” கருவி களை அமைக்க அதானி நிர்வாகம் அனு மதி மறுத்து வருகிறது. விமான நிலையமே அமைத்துள்ள நெட்வொர்க் சேவையை மட்டுமே பயன் படுத்த வேண்டும் என வற்புறுத்தலும் நீடிக்கிறது. இதற்கு ஒரு நிறுவனத்திற்கு மாதம் ரூ.92 லட்சம் வீதம், ஆண்டுக்கு சுமார் ரூ.44 கோடி வரை மிக அதிகக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படு கிறது. இது 2023ஆம் ஆண்டு தொலைத் தொடர்புச் சட்டம் மற்றும் “ஆர்ஒடபிள்யு (Right of Way - RoW)” விதிகளை மீறும் செயல். அதா வது ஏகபோக உரிமையை உருவாக்க முயற்சி நடக்கிறது” என தொலைத் தொடர்புத் துறையிடம் (DoT) அதானி குழுமத்திற்கு எதிராகப் புகார் அளித் துள்ளது.