மத நல்லிணக்கம் குறித்து பேச்சு... காவல் ஆய்வாளரை பணியில் இருந்து நீக்கிய உ.பி., பாஜக அரசு
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்ச ராக கோரக்பூர் மடத்தின் சாமி யார் ஆதியத்நாத் உள்ளார். இந்நிலையில், உத்தரப்பிர தேசத்தின் தியோபந்த் காவல் நிலைய ஆய்வாளர் நரேந்திர குமார் சர்மா கடந்த வாரம் 13 பேரை காவு வாங்கிய தில்லி குண்டுவெடிப்பு தொடர்பாக நவம்பர் 11 அன்று ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி னார். தியோபந்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நரேந்திர குமார் பேசுகையில்,”மக்கள் நல்லி ணக்கத்தைப் பேண வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் யாரும் நம்பக்கூடாது. பயங்கர வாதத்திற்கும், பயங்கரவாதி களுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கர வாதிகள் என்று நினைப்பது தவ றானது. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர். இந்து சமூ கத்தை சேர்ந்தவர்களும் கூட நக் சல்களாக உள்ளனர். கடற்படை யில் பல பயங்கரவாதிகள் பிடி பட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ் சாப்பில் பல இந்து பயங்கரவாதி கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்ற வர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை. மாணவ னாக இருந்தபோது நான் கண்டு வியந்த காவல்துறை அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்கா கவே நான் காவல்துறையில் சேர்ந் தேன். காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுகிறது” என குற்றம்சாட்டி னார். நீக்கம் ஒருபக்கம் காவல் ஆய்வாளர் நரேந்திர குமாரின் மத நல்லி ணக்க பேச்சுக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது. ஆனால் மறுபக்கம் மத நல்லி ணக்கம், இந்து மதம், ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி மறைமுகமாக பேசியதாக கூறி நரேந்திர குமார் பணியில் இருந்து நீக்கப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச பாஜக அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
