states

img

தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, டிச.3- புதுதில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மருத்துவ மனைகளின் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதி அளித்துள்ளது. தில்லி காற்று மாசு பாட்டை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட வழக் கின் விசாரணையின்போது, கொரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள அமைக்கப்படும் மருத்து வமனைகளின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க தில்லி அரசு கோரிக்கை விடுத்தது.  மேலும், காற்று மாசு பாட்டைக் கட்டுப்படுத்து வதற்கான வழிகாட்டு தல்கள் பின்பற்றப்படு கிறதா? என்பதை கண்கா ணிக்க காற்றுத் தர மேலாண் மை ஆணையத்தால் பறக்கும் படைகள் அமைக் கப்பட்டதாக ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக உத்தரப்பிரதேசத்தில் தொழிற்சாலைகளை மூடு வதால் கரும்பு ஆலைகள் உள்ளிட்டவை பாதிக்கப் படும் என்றும் பாகிஸ்தா னில் இருந்து வரும் காற்றால் தான் மாசுபாடு ஏற்படுவதாகவும் நீதி மன்றத்தில் உ.பி., மாநில  அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதற்கு பாகிஸ்தானில் உள்ள ஆலைகளை மூட உத்தரவிடலாமா? என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பி னார்.