மதமாற்றத் தடைச் சட்டம் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
“நேஷனல் கவுன்சில் ஆப் சர்ச்சஸ் இன் இந்தியா” என்ற கிறிஸ்தவ அமைப்பு மத மாற்றத் தடைச் சட்டத் திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தது. இந்த மனு திங்க ளன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, “மதமாற்றத் தடைச் சட்டங்கள் தனிநபர் சுதந்திரம் மற்றும் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் உரி மையைப் (அரசியலமைப்புச் சட்டம் 25) பாதிக்கிறது. சில மாநில சட்டங்கள், மதமாற்றம் குறித்து புகார் அளிக்க தேவையற்ற குழுக்களையும் தூண்டி விடுகிறது” என குற்றம்சாட்டினார். இருதரப்பு வாதத்திற்கு பின்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 4 வாரங்களுக்குள் ஒன்றிய அரசு மற்றும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், சத்தீஸ்கர், கர்நா டகா, ராஜஸ்தான், ஒடிசா, அருணாச்ச லப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
