ராகுல் காந்தி பேசும் போது மைக் அணைப்பு
நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. திங்களன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதிய போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுகிறது” என குற்றம் சாட்டினார். மேலும், “இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது தொடர்பாக அந்த புத்தகத்தில் உள்ளது. அதனால் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தை அரசு தடுத்துள்ளது” என அவர் கூறினார். இதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளி யிடப்படாத மற்றும் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத ஒரு புத்தகத்தை அவையில் மேற்கோள் காட்டுவது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்று அமைச்சர்கள் வாதிட்டனர். ஆனால், தான் குறிப்பிடும் தகவல்கள் “100 சதவீதம் உண்மையானவை” என்று ராகுல் காந்தி வாதிட்டார். தொடர்ந்து ராணுவம் தொடர்பான குறிப்புகளை ராகுல் காந்தி வாசித்தார். உடனே அவ ரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பலமுறை ஒத்திவைத்தார். 4 மணிக்கு மேல் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மாநிலங்களவையில் உடான் திட்டம், நீர் மாசுபாடு, பார்வைக் குறைபாடு கார ணமாக மாலை 6 மணிக்கு மேலாகவும் விவாதம் நடைபெற்றது. முன்னதாக, மதியம் 12 மணிக்கு மேல் எதிர்க்கட்சிக ளின் கிளர்ச்சியால் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
