வறுமையை ஒழித்த இடதுசாரி மாடல் கேரள அரசுக்கு சிவசேனா (உத்தவ்) பாராட்டு
மும்பை வறுமையை ஒழித்த இடது சாரி மாடல் கேரள அர சுக்கு “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் மகாராஷ் டிரா பிராந்திய கட்சியான சிவசேனா (உத்தவ்) பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா வில் சஞ்சய் ராவத் (சிவசேனா (உத் தவ்) தலைமை செய்தி தொடர்பாளர்) எழுதிய கட்டுரை: பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டின் பிர தமரும் (மோடி) அவரது மற்ற அமைச்சர்களும், பாஜக மாநில முத லமைச்சர்களும் பிரச்சார கூடா ரங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், நாட்டின் ஒரு மூலையிலிருந்து ஒரு நம்பிக்கை யான செய்தி வந்தது. அந்த செய்தி யாதென்றால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “தங்கள் மாநி லத்தில் இனி யாரும் மிகவும் ஏழை கள் இல்லை” என்று அறிவித்தார். அதாவது கேரள மாநிலத்தில் வறு மையை ஒழித்ததாக அறிவித்தார். இதுபோன்ற சாதனையை நிக ழ்த்திய முதல் மாநிலம் கேரளா என் றும் அவர் பெருமிதமாக கூறினார். நாட்டிற்கே பெருமை முதலமைச்சர் பினராயி விஜய னின் அறிவிப்பு கேரளாவுக்கு மட்டு மல்ல, இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். இந்த சாதனைக்காக கேரள அமைச்சர வையை இந்திய மக்கள் கவுரவிக்க வேண்டும். குறிப்பாக கேரளாவில் ஒரு கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில்) அரசு உள்ளது. அதனால் யாராக இருந்தா லும், இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தியவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்ட வேண் டும். பாஜக ஆளும் மாநிலங்களின் ஒரு முதலமைச்சராவது இது போன்ற அறிவிப்பை வெளியிட முடியுமா? ஒரு சதவீதம் கூட சாத்தி யமில்லை. இப்படிப்பட்ட சூழலில், கேரள அரசு தங்கள் மாநிலத்தில் யாரும் மிகவும் ஏழைகள் இல்லை என்று அறிவிப்பது மிகப்பெரிய விஷயம் ஆகும். வறுமையை ஒழிக்க கேரள அரசு பெரியளவில் சிறப்பு திட் டத்தை மேற்கொள்ளவில்லை. ஆனால் திட்டங்களுக்கு அங்கீக ரிக்கப்பட்ட பணம் திட்டங்களுக்கே செலவிடப்பட்டது. இதுதான் மிவும் கடினமான முயற்சி ஆகும். கேரள அரசு 2021ஆம் ஆண்டு “தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தை” தொடங்கியது. இதற்காக 64,006 மிகவும் ஏழைக் குடும்பங்கள் அடை யாளம் காணப்பட்டன. இந்தக் குடும்பங்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் மற்றும் சுகாதாரம் தொடர்பான உதவிகள் வழங்கப் பட்டன. நிதி ஆயோக் நடத்திய ஆய்வின்படி, கேரளாவின் வறுமை விகிதம் நாட்டிலேயே மிகக் குறை வான அளவான 0.7 சதவீதம் ஆகும். மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 99 பேர் மிகவும் ஏழைகள் என்று கணக்கெடுப்பில் கண்டறியப்பட் டுள்ளது. இந்த மக்கள் மீது அர சாங்கம் குறிப்பாக கடுமையாக உழைத்து அவர்களை தீவிர வறுமையிலிருந்து விடுவித்தது. பக்கோடா - பாஜக கேரள அரசைப் போல் அல்லா மல் மக்களை தீவிர வறுமையிலி ருந்து விடுவிக்க பாஜக கட்சி ஒரு திட்டத்தை வைத்துள்ளது. மோடி யின் அரசாங்கம் அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வரு கிறது. அந்த திட்டம் என்னவென் றால், ஏழைகளின் வீடுகளை புல் டோசர் மூலம் இடிப்பது, வங்கதேசி கள் மற்றும் ரோஹிங்கியாக்கள் என்று அறிவித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது, வேலையில்லாத பட்டதாரிகளை ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை கள் வழங்குவதாக உறுதியளித்து பக்கோடாக்கள் வறுக்க வைப்பது, அவர்களை ரீல்ஸ்கள் தயாரிக்க ஊக்குவிப்பது போன்றவை தான் அவர்களின் வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகும். மேலும் பாஜக அரசின் தீவிர வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கும், இந்துக்க ளுக்கும் மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி, இறுதியாக கலவரங்களைத் தூண்டி, அதன் அடிப்படையில் தேர்தல்களில் வெற்றி பெறுவதாகும். மக்களை வெறியர்களாகவும் பைத்தியக்கா ரர்களாகவும் ஆக்குவது வறுமை ஒழிப்புக்கான பாஜகவின் வழி. எனவே வறுமை ஒழிப்பு அடிப் படையில் கேரள அரசு செய்தது பாராட்டத்தக்கது. கேரளா இந்தியா வின் ஒரு பகுதி என்பதில் நாம் பெரு மைப்பட வேண்டும். நிச்சயமாக, ஒவ்வொரு மாநிலமும் கேரளாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண் டும் என்று சொல்வது கூட தற்போது குற்றமாகக் கருதப்படலாம். இதற்கு எல்லாம் அஞ்சப்போவ தில்லை. நாட்டில் வறுமையை ஒழிக்க தற்போதைய ஆட்சியா ளர்களுக்கு கேரள மாடல் தான் ஒரே வழியாகும் என கட்டுரை மூலம் சிவ சேனா (உத்தவ்) பாராட்டியுள்ளது.
