ஜேஎம்எம் மூத்த தலைவர் சுப்ரியோ பட்டாச்சார்யா
தற்போதைய பாஜக கூட்டணி அரசின் கீழ் பீகார் மக்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம், கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கும், ஜனநாயக ஆட்சியை நிறுவுவதற்கும் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை பீகார் மக்கள் கண்டிப்பாக ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவார்கள்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு பெண்களுக்கு உரிமைகளை மறுக்கிறது. இதைப் பற்றி ஒன்றிய அரசு அவர்களுடன் பேசும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தூதரகத்திற்குள் பெண் பத்திரிகையாளர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்ட விஷயத்தில் கூட மோடி அரசாங்கம் மௌனம் சாதிக்கிறது.
மகாராஷ்டிர சோசலிசக் கட்சி தலைவர் அபு ஆஸ்மி
பீகார் தேர்தலுக்கு முன்பாக பாஜகவை அம்பலப்படுத்துவதை தடுக்கவே சமாஜ்வாதி தலைவர் அகிலேஷின் முகநூல் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முடக்கத்திற்கெல்லாம் அஞ்ச மட்டோம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
ஆப்கானிஸ்தான் அமைச்சர் முத்தகி உரையாற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில்ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்.