states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு மிகப்பெரிய மோசடி. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நிராகரித்துவிட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி இல்லையென்றால் மத்தியப் பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கும்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

2024 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் “இந்தியா” கூட்டணியே அதிக இடங்களை வென்றுள்ளது. பாஜக பெரும்பான்மை பெறுவதையும் “இந்தியா” கூட்டணி தடுத்துவிட்டது. இப்போது மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. வரும் காலங்களில் பாஜகவின் நிலைமை மோசமாகும்

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. ஆனால் மது தடை என்ற பெயரில் பாஜக கூட்டணி அரசால் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், தலித்கள் மீதான ஒடுக்குமுறை கருவி ஆகும்.

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்

பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கினர். இது முற்றிலும் அரசியல் நோக்குடன் செய்யப்பட்டது. மேற்கு வங்கம்,
 கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்க
ளில் ஆளுநர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகள்  அதிகரித்தன.