வக்பு சட்டத்தை எதிர்த்து போராடிய முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் - பாஜக குண்டர்கள் அட்டூழியம்
வன்முறை பூமியான மால்டா, முர்ஷிதாபாத், தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி மாவட்டங்கள்
கொல்கத்தா முஸ்லிம் மக்களை ஒடுக் கும் முனைப்பில் கொண்டு வரப்பட்ட வக்பு திருத்த மசோதா எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கடும் எதிர்ப்பு க்கு இடையே, கடந்த வாரம் நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வக்பு மசோதா குடியரசுத் தலை வர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்குப் பின் சட்டமானது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் மற்றும் சமூக, ஜனநாயக அமைப்புகள் அஹிம்சை வழியில் அமைதியாக போராட்டம் நடத்தி னர். இந்த போராட்டத்தில் புகுந்த இந்துத்துவா குண்டர்கள் தாக்கு தல் நடத்தினர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பதில் தாக்குதல் என்ற பெயரில் வன்முறையை மேலும் தூண்ட முர்ஷிதாபாத் நகரம் வன்முறை பூமியாக மாறியது. இந்த வன்முறையில் முஸ்லிம் மக்களின் வீடுகள், வாகனங்கள் தீ வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டன. காவல் துறையை நோக்கி கற்கள் வீசப் பட்டன. பின்னர் அதிரடிப்படை யினர் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று (ஏப்.11) முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் - பாஜக குண்டர்களின் மோதலால் மீண்டும் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மட்டு மின்றி அருகில் உள்ள மாவட்டங்க ளான மால்டா, தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி உள்ளிட்ட 3 மாவட்டங்க ளின் போராட்டக் களத்திலும் வன்முறை பரவியது. 4 மாவட் டங்களிலும் காவல்துறை வாக னங்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாது காப்புப் படைகள் மீது கற்கள் எறி யப்பட்டன. சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் முக்கிய நகரங்கள் துண்டிக்கப்பட்டன. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சனிக்கிழமை அன்று அதிகா லை முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வன்முறையை மேற்கு வங்க அதிரடி காவல் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
4 மாவட்டங்களில் ஊரடங்கு
வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி உள்ளிட்ட 4 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு மற்றும் இணைய சேவை முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளன. தொடக்க நடவடிக்கையாக முர்ஷி தாபாத்தில் 111 பேருக்கு மேல் (சூதி பகுதியில் 70 பேரும், சம்சர்கஞ்ச் பகுதியில் 41 பேரும்) கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க காவல் துறை தகவல் தெரி வித்துள்ளது. ஆனால் மால்டா, தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் கைது நடவடிக்கை தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
சிறுவன் படுகாயம்
சூதி பகுதியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் படுகாயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் 4 மாவட்ட வன்முறையில் காயம் மற்றும் உயிர்ச்சேதம் தொடர்பான செய்திகள் எதுவும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
வாக்கு வங்கிக்காக வன்முறையை தூண்டிவிட்ட திரிணாமுல் - பாஜக குண்டர்கள்
மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அதனால் தான் வக்பு சட்டத்தை எதிர்த்து அங்கு பிரம்மாண்ட போ ராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், அடுத் தாண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. வாக்கு வங்கி அரசிய லுக்காக ஆளும் திரிணா முல் காங்கிரஸ் - பாஜக குண் டர்கள் முஸ்லிம் மக்களின் போராட்டக் களத்திற்குள் புகுந்து வன் முறையை தூண்டிவிட்டது அம்பலமாகியுள்ளது.
பரஸ்பர குற்றச்சாட்டு
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வக்பு மசோதாவை ஏற்க மாட்டோம் என்று கூறியதாலேயே வன்முறை வெடித்ததாக பாஜக குற்றம் சாட்டுகிறது. அதே போன்று முஸ்லிம் மக்களின் போராட்டக் களத்திற்குள் பாஜகவினர் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்தது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இவ்வாறு மாறி மாறி குற்றம் சாட்டி தங்களது வன்முறை வெறி யாட்டத்தை நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக குண் டர்களே வன்முறைக்கு காரணம் என சமூகவலைத் தளங்களில் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.