சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
பாஜக மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன் ஜம்மு-காஷ்மீரில் இருந்து கூட வாக்காளர்களை அழைத்து வந்து எந்தத் தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பாஜக தயங்காது என்று பெருமையாகக் கூறுகிறார். இது, வெளியில் இருந்து வாக்காளர்களை மொத்தமாகப் பதிவு செய்து, திருச்சூரை (கேரளா) கைப்பற்றியதற்கான வெளிப்படையான ஒப்புதலாகும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
பீகாரின் கயா மாவட்டத்தில், சரியான ஆவணங்களை சமர்ப்பித்தும் வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பதாக பல பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முன்பு இறந்து போன பெற்றோரின் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பீகாரின் பெண்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது பாஜக. இதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கிறது.
திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்
மகாபிரபு (மோடி)... ஒரு சிறிய சந்தேகம். நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தும் மசோதாவின் பின்னணியில், முதலமைச்சர் உங்கள் சொல்லைக் கேளாமல் இருந்தால், அவரை கைது செய்து,”உங்கள் சொல்லைக் கேட்கும் துணை முதலமைச்சரை” முதலமைச்சராக நியமிக்கும் எந்த சூழ்ச்சியும் உங்களிடம் உள்ளதா???
அமேசான் வெப் சர்வீஸ் சிஇஓ மேட் கார்மன்
இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் முதலாளிகளின் முடிவு முட்டாள்தனமானது. இன்று இம்முடிவு புத்திசாலித்தனமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்காலத்தில் அனுபவம் வாய்ந்த நபர்கள் யாரும் உங்கள் நிறுவனங்களில் இருக்க மாட்டார்கள்.