tamilnadu

img

வெண்கொடிப் பேரணியுடன் துவங்கியது இந்திய மாணவர் சங்க மாநாடு!

வெண்கொடிப் பேரணியுடன் துவங்கியது இந்திய மாணவர் சங்க மாநாடு!

திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 27வது மாநாட்டு பேரணி வெள்ளியன்று எழுச்சியுடன் நடைபெற்றது. ராயபுரம் ரவுண்டானா அருகே, இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதல் கிளைச் செயலாளராக இருந்த ஹரிஹரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி, மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி, அகில இந்தியத் துணைத் தலைவர் மிருதுளா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அணிவகுத்து வந்தனர்.   பேரணி ராயபுரத்தில் தொடங்கி ஜெய்வாபாய் பள்ளி சாலை, தியாகி குமரன் நினைவகம் வழியாக பிரதான சாலையில் சென்று நொய்யல் அருகே ஸ்ரீ சக்தி திரையரங்கம் பகுதியில் நிறைவடைந்தது.  முன்னதாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், மத்திய மாநில அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாணவர் பேரணியை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர்.  (செய்தி : 8)