மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் சலவை தொழிலாளர்கள் கோரிக்கை
சென்னை, ஆக. 22 - மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சலவை தொழி லாளர்கள் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு வெள்ளி யன்று (ஆக.22) புரசைவாக்கத்தில் நடை பெற்றது. இதில், பழுதடைந்த சலவைத் துறைகளை சீரமைக்க வேண்டும், இஸ்திரி வண்டிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும், அயனாவரம் சலவைத் துறையில் கல் வரி, அறை வரி போட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ.பெரியசாமி தலைமை தாங்கி னார், துணைச் செயலாளர் எஸ்.கண்ணன் வரவேற்றார், அஞ்சலி தீர்மானத்தை பி.ராஜாராம் வசித்தார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எம்.உதயகுமார் பேரவையை துவக்கி வைத்தார், வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் கே.பாபு சமர்ப்பித்தார். நிர்வாகிகள் தேர்வு 15 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவராக ஆ.பெரியசாமி, பொதுச் செயலாளராக கே.பாபு, பொருளாளராக பி.ராஜாராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.