tamilnadu

img

பேசின் பாலத்தை அகலப்படுத்தக் கோரிக்கை

பேசின் பாலத்தை அகலப்படுத்தக் கோரிக்கை

அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (ஆக,22)  காலை 8 மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனம் நோயாளியின் அவசர உயிர் காக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் வியாசர்பாடி வழியாக பேசின் பாலம் ஏறும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதுபோன்ற நேரங்களில்  சில மணி நேரங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்படுவதால் உயிர் காக்கும் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் நோயாளி இறக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த அவல நிலையை களைய நோயாளியின் உயிர் காக்க மருத்துவமனையை சுற்றியுள்ள பாதைகளையும் பேசின் பாலம் ( மூலக்கொத்தளம் அருகில்) விரிவாக்கம் செய்து ஆம்புலன்ஸ் போக்குவரத்துக்கும் காலையில் பள்ளி மாணவர்கள் செல்ல  வசதியாகவும் பொதுமக்கள் நலம் கருதியும் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் குடியிருப்போர் நல சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.